ஜமீன்தார் குடும்பத்தில் காஜல்!

காஜல் அகர்வால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து, முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார். தற்போது காஜல் அகர்வால் கருங்காப்பியம் என்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படம் சுதந்திரத்திற்கு முன் உள்ள காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு கதையாக இருக்கும். இதில் காஜல் ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் ஆவி போன்ற ஒரு திகில் கதாபாத்திரத்தில் நடிப்பதாக உள்ளார். மேலும் இவர் இதே போன்ற ஒரு வெப்செரிஸ்ல் நடித்தது குறிப்பிடத்தக்கது.