44 வயதிலும் பிட் ஆகும் நடிகை!

1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்டில் விசேஷங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்துள்ளார்.மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வந்தார். வயதாகும் இவர் தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பல்வேறு கடினமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்கள் நடனம் செய்யும் வீடியோக்கள் என்று பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். வீடியோவை பார்த்த சிலர் இந்த வயதிலும் இப்படி ஒரு பெண்ணா என்று பாராட்டிய நிலையில் சிலர் கேலியும் செய்தனர். அதற்குப் பின்பு இப்படி எடையை குறைப்பதால் கதாநாயகி வாய்ப்பா கிடைக்கபோகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பதிலளித்த பிரகதி நான் உடம்பை குறைக்க உடற்பயிற்சி செய்யவிலை, ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கவும் தான் செய்கிறேன் என்று கூறியிருந்தார்.