இன்று வெளியாகிறது வாடிவாசல் டைட்டில் லுக் ; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ்த்திரையுலகில் பொல்லாதவன் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி, ஆடுகளம், விசாரணை, அசுரன் என தொடர்ச்சியான தனது குறிப்பிடத்தகுந்த படைப்புகளின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பெற்றிருப்பவர் வெற்றிமாறன். அழுத்தமான கதைக்களங்களை தேர்ந்தெடுப்பது,சமூக அக்கறை போன்றவற்றால் வெற்றிமாறன் எப்போதும் தமிழ்த்திரையுலகில் அனைவராலும் விரும்பப்படுபவர்.

அத்தகைய வெற்றிமாறனோடு நடிகர் சூர்யா இணையும் வாடிவாசல் திரைப்படம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தியதாக இருக்குமென செய்திகள் வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் கிளம்பியிருந்தது. காரணம், சேவல் சண்டையை மையப்படுத்திய ஆடுகளம் திரைப்படத்தில், சேவல் சண்டை காட்சிகள் உட்பட அந்த கதைக்கு தேவையான அனைத்தையும் தத்ரூபமாக பதிவு செய்திருந்தார் வெற்றி மாறன். அத்திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் வாடிவாசல் திரைப்படமும் ஜல்லிக்கட்டு குறித்து அழுத்தமாக பேசும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று மாலை வாடிவாசல் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்படுமென தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

வாடிவாசல் டைட்டில் லுக் வெளியாக உள்ளதை தொடர்ந்து மகிழ்ச்சியில் உள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…