மூன்று தேசிய விருது வென்ற நடிகை மரணம்
1978-ஆம் ஆண்டு அரசியல் திரைப்படமான ’கிசா குர்சி கா’ என்ற படத்தின் மூலம் சுரேகா சிக்ரி திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். 1988-ஆம் ஆண்டு வெளியான ‘ தமஸ்’, 1995-ஆம் ஆண்டு வெளியான ‘மம்மோ’, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’பதாய் ஹோ’ ஆகிய படங்களுக்காக மூன்று முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
இந்தி மட்டுமல்லாமல் மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் சுரேகா சிக்ரி நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த போது, தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டதில் மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.
75 வயதாகும் அவர் தற்போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.