சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அவரது ரசிகர் மத்தியில் அவரை இன்னும் பெரிய நடிகராக மாற்றியுள்ளது. இதைதொடர்ந்து சூர்யா வாடிவாசல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் இருக்கும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிந்ததாகவும் இன்னும் ஒரு காட்சி மட்டுமே மீதம் உள்ள தாகவும், அந்த காட்சியை கொரோன கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் எடுத்து விடுவோம் என்று கோரியிருந்தார். இந்த காட்சியை அடுத்த மாதத்திற்குள் படம் பிடித்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 :30 மணிக்கு வெளியாகும் என்பதை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு டுவிட் செய்துள்ளார்.