விஷ்ணு விஷால் படத்தின் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ராட்ச்சன் திரைப்படம் மூலம் பெரிதும் பேசப்பட்ட விஷ்ணு விஷால் தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படத்தில் நடித்து வரும் இளம் நடிகராக தமிழ் சினிமாவில் வலம்வருகிறார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘எஃப்.ஐ.ஆர்’. இந்த படம் முழுக்க முழுக்க அக்சன் படமாக அமைந்திருக்கும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஒரு பாடல் வெளியாகும் தேதியை விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

எஃப்.ஐ.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பயணம்’ என்னும் பாடல் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளது என்று அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்த படத்திற்கு அஸ்வத் இசை அமைத்துள்ளார்.மேலும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெபா மோனிகா நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *