வில்லனாக மாறும் ஆர்யா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் ஆர்யா, தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் ஆர்யா அவர்களுக்கு வெளியான படம் ‘மகாமுனி’. இந்த வரிசையில் ஆர்யாவின் அடுத்த படமாக ‘சார்பட்டா பரம்பரை’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல படங்களில் கதாநாயகனாக நடித்த ஆர்யா தற்போது தன் நண்பனின் திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்குகிறார். விஷால் நடிப்பில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘எனிமி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் .
மேலும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் லிங்குசாமியின் திரைப்படத்திலும் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்.