அளவின்றி கிடைத்த வலிமை அப்டேட்!
இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தத வலிமை படத்தின் அப்டேட்-மோஷன் போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. அந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.ஒரே நாளில் 1 கோடி பார்வைகளை யூடியூபில் கடந்திருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் நேற்று இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர் வலிமை படக்குழுவினர். அதில் அஜித் பைக் ரேஸராக இருப்பது போன்று வெளியாகியுள்ளது.
இப்படி கேட்காமல் வந்த அப்டேட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். திரைப்படத்திலும் அஜித் பைக் ரேஸராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.