மீண்டும் திரைக்கு வருகிறார் வைகைப்புயல்!

திரையில் வரவில்லை என்றாலும் நம் அன்றாட வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கிறார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இன்று காலை நடிகர் வடிவேலு தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களை சந்தித்து முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடை அளித்தார்.
பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு 10 ஆண்டுகள் கழித்து பல படங்களில் நடித்து வருவதாகவும் விரைவில் அவை அனைத்தும் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பத்திரிக்கையாளர்கள் கொங்குநாடு சர்ச்சையை பத்தி கேள்வி எழுப்பியபோது பதிலளித்த வடிவேலு தமிழ்நாட்டில் ஒரத்தநாடு ராம்நாடு கொங்குநாடு இன்னும் எத்தனை நாடு தான் இருக்கு. இதை எல்லாம் கேட்கும்பொழுது தலை சுற்றுகிறது என்றும் ,நல்லா இருக்குற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கவேண்டும் என்றும் கூறினார்
2011 ஆம் ஆண்டு நடக்கவிருந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது திமுகவின் ஆதரவாக பிரச்சாரம் கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த பொழுது தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.