ஓடிடியால் பாதிக்கப்படும் தியேட்டர் உரிமையாளர்கள்!

கொரோன நோய்தொற்று காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் மட்டுமே வெளியாகிறது. முதலில் ஓடிடியில் சிறிய படங்கள் மட்டுமே வெளியான நிலையில் தற்போது பெரிய படமான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ போன்ற படமும் ஓடிடியில் தான் வெளியானது. மேலும் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இதேபோல் தெலுங்கானாவிலும் பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ஓடிடி யில் வெளியாகி வருகின்றன. தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ள ‘நரப்பா’ படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மற்றும் இவர் நடித்த ‘திருஷ்யம்-2’ படமும் ஓடிடியில் தான் வெளியாக உள்ளது. மேலும் ராணா டகுபதி, சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள ‘விராட பர்வம்’ படமும் ஓடிடி ரிலீஸ் தான்.
ஆனால் இப்படி மூன்று பெரிய படங்களை எடுத்து திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிடுவது சரிதானா? என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியாகும் போதே தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு செலவுக்கு மேல் லாபம் கிடைத்து வருகிறதாம்.’நிரப்பா படம்’ 40 கோடி, ‘த்ரிஷ்யம்-2 36 கோடி’, ‘விராட பர்வம்’ 50 கோடி என ஓடிடி தளங்கள் வாங்கி உள்ளதாம்.
தியேட்டர்களில் வெளியாகி படத்திற்கு ரசிகர்கள் வந்தால் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம். ஆனால், ஓடிடி தளங்களில் அந்த ரிஸ்க் கிடையாது. படத்தை நல்ல விலைக்கு விற்றாலே போதும் லாபம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.