விஜய்க்கு ஆதரவாக பேசிய பாஜக நடிகை!

தளபதி விஜயின் கார் வரி குறித்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த போது நீதிபதி ,சினிமா ஹீரோக்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பாஜக ஆதரவு நடிகை ஒருவர் விஜய் உண்மையிலேயே ஹீரோதான் என்று ட்விட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நடிகையும் நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியில் ஒருவருமான பாஜக ஆதரவு நடிகை காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, விஜய் ஒரு உண்மையான ஹீரோ தான். அவர் பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி போன்ற பலவற்றுக்கு நிதி கொடுத்துள்ளார். பல மாணவர்கள் படிப்பதற்கு உதவுகிறார். எத்தனையோ ரசிகர் குடும்பங்களுக்கு உதவி செய்கிறார். அவர் மீது வந்த ஒரு சர்ச்சையை வைத்து அவர் செய்த நல்ல விஷயங்களை மறந்து விடக்கூடாது என்றும் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.