குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் இயக்குனர் நவீனின் மகள்!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய நடிப்பில் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இவர் ‘மூடர் கூடம்’ நவீன் இயக்குகிற ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் அருண் விஜய்யுடன் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அக்சரா ஹாசன், சம்பத், சதீஷ்குமார், செண்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.
தற்போது இயக்குனர் நவீனின் மகள், அக்னிச் சிறகுகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இவர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் என் மகள் சீவீனுக்கு இயக்குனராக எப்படி அழுது நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தபோது, ஒரு சிறந்த நடிகை போல் அவள் என்னை உள்வாங்கும் அழகை இன்று நான் ரசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.