சார்பட்டா பரம்பரை படத்தின் டீஸர் வெளியானது!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. ரஞ்சித் அவர்கள் அட்டக்கத்தி,மெட்ராஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் காலா, கபாலி போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது பா.ரஞ்சித் ஆர்யாவை வைத்து இயக்கும் முதல் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இத்திரைப்படத்திற்கு பா.ரஞ்சித் முதலில் சூர்யாவை நடிக்க வைப்பதாக இருந்தார். பின்பு சூர்யா அவர்கள் பிஸியாக இருந்த காரணத்தினால் ஆர்யா அவர்களை படக்குழு தேர்வு செய்தது.

சார்பட்டா பரம்பரை 1970களில் நடக்கும் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பா. ரஞ்சித் அவர்கள் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் சார்பட்டா படத்தின் டீஸர் இன்று வெளியானது. இத்திரைப்படம் ஆர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் தலத்தில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *