கார் ரேஸராக மாறிய நடிகை நிவேதா!

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். பிறகு பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன், திமிரு புடிச்சவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக tik.tik.tik என்ற படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஒரு சில நாட்களுக்கு முன்பு நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார் ரேசிங் பயின்று கொள்வதாக தெரிவித்திருந்தார். இன்று அவர் கார் ரேஸில் முதல் பகுதியை முடித்து அதற்கான சான்றிதழை ஃபார்முலா ரேஸ் கார் ட்ரெய்னிங் ப்ரோக்ராமில் வாங்கியுள்ளார்.
கார் ரேஸின் போது எடுத்த அட்டகாசமான புகைப்படத்தை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நிவேதா, வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ எனும் திரைப்படத்திலும் ஏ.எல் விஜயின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘அக்டோபர் 31 லேடீஸ் நைட்’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.