கணவரை பற்றி மனம் திறந்த ராகவி!

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ராகவி பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘ராஜா சின்ன ரோஜா’ மற்றும் தளபதி விஜயுடன் ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து ஒளிப்பதிவாளர் சசி குமாராய் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பதிமூன்று ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு சசி குமார் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் பொருளாதார சிக்கல் மற்றும் தொழில் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் பணியாற்றிய மகேஷ் என்பவர் சசி செட்டில் இருந்து கேமராவை திருடியதாக கூறி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை சசிகுமார் கொலை செய்யப்பட்டாரா இல்லை தூக்கிட்டு கொண்டாரா என்று எந்த ஒரு தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ராகவி தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தான் நடிக்க வந்ததர்க்கு காரணம் தன் மகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் கணவரின் இறுதி சடங்கை தானே செய்ததாகவும் தன் கணவர் மீது கோவமாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். சசி குமார் தன் கஷ்டத்தை பகிர்ந்த்திடாதது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *