சிறு வயதில் தளபதியுடன் போட்டோ எடுத்த நடிகை!
கடந்த சில நாட்களாக தளபதி விஜய் அவர்கள் ஒரு குழந்தையை தூக்கி வைத்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. தற்போது இந்த குழந்தை ஒரு சீரியல் நடிகை என்பது தெரியவந்துள்ளது.’இதயத்தை திருடாதே’ என்ற தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹிம பிந்து.
இந்தநிலையில் விஜயின் கையில் இருந்த குழந்தை ஹிம பிந்து என்பது தெரிய வந்தது. சிறுவயதிலே ஹிம பிந்து தளபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தளபதியின் பிறந்தநாள் அன்று சமூக வலைத்தலத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது தளபதி ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.