அனுபமாவிற்கு காதல் தோல்வியா?🤔

பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனின் திறமையைக் கண்டு 18 பேஜஸ், கார்த்திகேயா 2, ரவுடி பாய்ஸ் போன்ற பல தெலுங்கு திரைப்படங்கள் அவருக்கு கிடைத்தன. அதேபோன்று தமிழிலும் அதர்வாவோடு சேர்ந்து நடிக்கும் தள்ளிப்போகாதே திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் இவர்.முக்கியமாக இன்ஸ்டாகிராமில் 100 லட்சம் பாலோவர்ஸ் கொண்டிருக்கிறார்.
அதேபோன்று இன்ஸ்டாகிராமில் அடிக்கடி லைவ் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார். இதே போன்ற ஒரு நாள் லைவ் வரும் பொழுது அவர் அவரைப் பற்றிய ஓர் உண்மையை சொன்னார்.
ஒரு ரசிகர் அவரைப் பார்த்து நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேட்டபொழுது”ஆமாம் நான் காதலித்தேன் ஆனால் அந்த காதல் முறிந்து விட்டது” என்று கூறியுள்ளார். அதேபோன்று இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக வந்த செய்தி ஒரு வதந்தி என்றும் கூறியுள்ளார்.