படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிறந்த கேங்ஸ்டார் படமாக விக்ரம் வேதா இருந்தது. புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மாதவன், விஜய் சேதுபதி என இரு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இதில், விஜய் சேதுபதி வில்லனாக அசத்தியிருப்பார். வசூலிலும் பட்டையைக் கிளப்பிய இந்த படம் தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகி வருகிறது.
இந்தியிலும் புஷ்கர்- காயத்ரி தான் படத்தை இயக்குகின்றனர். தயாரிப்பாளர் சஷிகாந்த் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
விக்ரம் – வேதா இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதியாக ஹ்ரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.