கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல நடிகர்!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக வீசி வந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் வைக்க தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பரவலாக கோவாக்சின் மற்றும் கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது.

அரசியல் பிரமுகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். மேலும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரபல தமிழ் நடிகர் சிபிராஜ் தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *