மகளாக நடித்தவருடன் அமீர்கானுக்கு மூன்றாவது திருமணமா?

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நடிக்கும் அமீர்கான் இந்திய சினிமாவின் முக்கிய முகமாகப் பார்க்கப்படுகிறார்.

அமீர்கானுக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதன்பின், 2005 ஆம் ஆண்டு தான் நடித்த லகான் படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால் இருவரும் சம்மதித்து விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டனர்.

அதற்குள் அமீர்கானின் மூன்றாவது திருமணம் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த ஃபாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்தி பரவி வருகிறது.

இது குறித்து, நடிகை ஃபாத்திமா சனா ஷேக், “முன்பெல்லாம் இதுபோன்ற செய்திகள் வரும்போது தனக்கு கஷ்டமாக இருக்கும். இப்போது அப்படி இல்லை. காரணம் வதந்திகள் அளவுக்கதிகமாக பரவுவது வழக்கமாகி விட்டது. இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இந்த பிரச்சனையை கண்டுக்கொள்ளாமல் அப்டியே விட்டுவிட்டால் அதுவே தானாக அடங்கி விடும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…