சென்னை திரும்பிய ’அண்ணாத்த’

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்து கொண்டார். இதன் பின்னர் அவர், அடிக்கடி அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து வருவது வழக்கம்.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கடந்த இரண்டாண்டுகளாக அவர் அமெரிக்கா செல்ல முடியாத நிலை நீடித்து வந்தது.

இதனால், அவசர மருத்துவ உதவிக்காக மத்திய அரசிடம் அனுமதி பெற்று சிறப்பு விமானம் மூலம் ஜூன் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கத்தார் வழியாக அமெரிக்கா சென்றார். 

அங்கு சிகிச்சை முடிந்துள்ள நிலையில், அங்குள்ள அவரது மகள் வீட்டில் 2 வாரங்கள் ஒய்வெடுத்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.

ஏற்கனவே, அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படம் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக வெளியாகும் என அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…