முதல் படத்தில் இரண்டு நாயகியுடன் நடிக்கும் அஷ்வின்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், ரெட்டை வால் குருவி போன்ற தொடர்களில் நடித்து, பின்பு ஒரு மிக பெரிய இடைவேளைக்கு பிறகு காதல் ஒன்று கண்டேன் என்ற குறும் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அஸ்வின் குமார். இவர் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலமாக தமிழ் மக்களிடம் மட்டும் இல்லாமல் தமிழ் பெண்களிடமும் ஒரு மிக பெரிய வரவேற்பை பெற்று புகழின் உச்சத்தை தொட்டவர் அஸ்வின்.
சமீபத்தில் இவருக்கு வலைத் தொடர் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்த போது, வலைத் தொடரில் நடிக்க மாட்டேன் என்றும் திரைப்படங்களில் கதாநாயகநாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி மிக பெரிய சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் குக் வித் கோமாளி தொடரில் ஷிவாங்கி ,அஸ்வின் இருவரின் ஜோடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் சிலர் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் திருமணம் செய்துகொண்டார்கள் என்றும் பல புகைப்படங்களை வெளியிட்டனர். இதற்கு நடிகர் அஸ்வின் குமார் இவை அனைத்தும் உண்மையில்லை என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தற்போது சின்னத்திரையில் பேர்போன அஸ்வின் குமார் வெள்ளித்திரையில் “என்ன சொல்ல போகிறாய் ” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை ஹரி ஹரன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக “அஸ்கு மாறோ” பாடலின் பிரபலம் தேஜு அஸ்வினியும் புதுமுகமான அவந்திகாவும் நடிக்கவுள்ளனர். தன்னுடைய முதல் படத்துலயே இரண்டு கதாநாயகிகளுடன் நடிக்கவிருக்கிறார் அஸ்வின் குமார்.