ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகிறது சார்பட்டா!

அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பா.ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தனது அடுத்தடுத்த படைப்புகளால் திரையுலகில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் ரஞ்சித். மேலும், மிக குறுகிய காலத்தில் தமிழ்த்திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தொடர்ச்சியாக இரண்டு திரைப்படங்களை இயக்கிவர். தனது அரசியல் பார்வை சார்ந்த படைப்புகளால் தனி கவனம் ஈர்த்தவர் ரஞ்சித்.

அத்தகைய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவுடன் இணைந்துள்ள திரைப்படமான சார்பட்டாவின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இத்திரைப்படம் அடுத்த மாதம் 22 ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, சார்பட்டா திரைப்படத்திலும் தனது வழமையான அரசியல் கருத்தாக்கங்கள் இடம்பெறுமென பா.ரஞ்சித் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *