கே.ஜி .எப் -2 வெளியாகும் தேதி அறிவிப்பு!
கன்னட இயக்குனர் பிரஷாந் இயக்கத்தில் வெளியான கே.ஜி .எப் திரைப்படம், தென்னிந்திய திரையுலகில் மாபெரும் வெற்றி படங்களில் ஒன்றாக உள்ளது. பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடபட்டுள்ள இந்த படத்தில் நடிகர் யாஷ், ராக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து ஸ்ரீநிதி ஷெட்டி, அனத் நாக், வஷிஸ்டா சிம்ஹ, அச்யுத் குமார், ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் இரண்டு பாகமாக படமாக முடிவு செய்து, முதல் பாகம் டிசம்பர் 20ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு வெளியானது. கன்னட திரையுலகில் 80பது கோடி செலவில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கபட்ட முதல் திரைபடம் கே.ஜி.எப். முதல் பாகம் வெளியான நேரத்தில் கன்னட ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பிறமொழி ரசிகர்களின் வரவேற்பை பெரிதும் பெற்ற திரைப்படம் இது.
திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை படைத்தது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக சுமார் 250பது கோடி வசூலினை பெற்று மாபெரும் சாதனையை படைத்தது. இந்த படத்தின் சாதனையை முறியடிக்க தற்போது கே.ஜி.எப்-2 படம் வெளியாக தயாரான நிலையில் உள்ளது. கே.ஜி.எப்-2 படத்தின் டீஸர் வெளியாகி, இருப்பது நான்கு மணிநேரத்தில்
அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஒரே யூடூப்ப டீஸர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது
தற்போது பாகம் இரண்டில் நடிகர் யஷ்வுடன் இணைந்து சஞ்சய் தத்தா, ரவீனா தண்டொன், பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை முதலில் அக்டோபர் 23ஆம் தேதி 2020ஆம் ஆண்டு தசரா பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோன நோய் பரவல் காரணமாக தேதி மாற்றப்பட்டது. பின்பு ஜனவரி 29ஆம் தேதி ஆன்று கே.ஜி.எப். திரைப்படம் 2021 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோன ஊரடங்கு காரணத்தால் படம் வெலியாகும் தேதியை மாற்றிவைத்துள்ளனர் படக்குழுவினர்.
கே.ஜி.எப். திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவிர்த்துள்ளனர்.