பழம்பெரும் நடிகர் திலிப்குமார் மரணம்

இந்தி திரையுலகில் 1944 ஆம் ஆண்டு ‘ஸ்வார் படா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் திலிப் குமார்.
பின்னர் தனது நடிப்பின் மூலம் இந்தி திரையுலகில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். இவரது சாதனைகளைக் கவுரவிக்கும் விதமாக தாதா சாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 98 வயதாகும் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த மாதம் 30 ஆம் தேதி திலிப்குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (7.7.2021) சிகிச்சை பலனில்லாமல் இறந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.