விக்ரம் படத்தின் புதிய ஒளிப்பதிவாளர்

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.
படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் பிசியானதால் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார்.
அடுத்து, கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. தற்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் லோகேஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சத்யன் சூரியன் இந்த படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியது.
ஆனால், இதுபற்றி எதுவும் அறிவிப்பு வெளிவராத நிலையில் புதிய ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் ஆகியுள்ளதை லோகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.