அறிமுக படத்திலேயே பாடகி அவதாரம் எடுத்த லாஸ்லியா

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா, தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக இளைஞர்களிடம் பிரபலமடைந்தார்.
இதனையடுத்து, அவர் விளம்பர படங்களிலிம் மாடலிங்கிலும் பிசியானார். தற்போது லாஸ்லியா முதன் முறையாக நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கும் ‘ப்ரென்ஷிப்’ என்ற படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ளார்.
ஏற்கனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், ஜூலை 3 ஆம் தேதி ஹர்பஜன் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு ’அடிச்சு பறக்கவிடுமா’ என்ற பாடல் வெளியானது.
தேனிசைத் தென்றல் தேவா பாடியிருக்கும் இந்தப் பாடலில் லாஸ்லியாவும் ஒரு பகுதியைப் பாடியுள்ளார். இதன் மூலம் தனது அறிமுக படத்திலேயே நாயகியாகவும் பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார் லாஸ்லியா.
மலையாளத்தில் சுராஜ் வென்ஜாரமூடு, சௌபின் ஷகிர் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான மலையாளத் திரைப்படம் ஆன்ட்ராயிடு குஞ்சப்பன். ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தைதான் தமிழில் கூகுள் குட்டப்பன் என ரீமேக் செய்ய உள்ளனர். இந்தப் படத்திலும் லாஸ்லியா நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.