சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம்!

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அந்த தீர்மானத்தில் நடிகர் சூர்யா மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா இதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அவர் மீது பாஜக சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வினோத் பி செல்வம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிரான கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.