சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

சூர்யா நடிப்பில் அண்மையில் ‘சூரரைப் போற்று’ படம் வெளியானது. கொரோனா காலத்தில் திரையரங்குகள் எதுவும் திறக்காமல் இருந்ததால் ஓடிடி தளத்தில் வெளியான படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதனையடுத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில், சூர்யாவுக்குச் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாக உள்ளது.
அதன்படி, ஜூலை 12 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக சூர்யா 40 படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.