படைப்பாளிகளுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? குமுறும் பிரபலங்கள்!
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்த ஒளிப்பதிவு திருத்த மசோதா மீதான தமது அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ளது. தற்போது, மீண்டும் இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யட்டப்பட உள்ளது.
அவ்வாறு, மேற்கண்ட ஒளிப்பதிவு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்ட படங்களையும் மீண்டும் தணிக்கை செய்ய கோரலாம். அதோடு, திரைப்பட திருட்டு உள்ளிட்டவை போன்றவைகளுக்கு அதிகபட்ச தண்டனைகளையும் வழங்கிட வழிகோலுகிறது.
அதே சமயம், இத்தகைய புதிய விதிகள் தங்களது படைப்பு சுதந்திரத்தை இல்லாமல் ஆக்கிடவே வழி செய்யுமென, புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதா குறித்து தங்களது கருத்துக்களை திரையுலக பிரபலங்களான நடிகர் சரத்குமார், விஷால், சூர்யா போன்றவர்கள் தெரிவித்துவருகின்றனர்.