ஒரே படத்தில் இணையும் அஸ்வின் – புகழ் ஜோடி

அண்மையில், தனியார் தொலைக்காட்சியில் வெளியான ’குக் வித் கோமாளி -2’ தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதில், போட்டியாளர்களாக கலந்து கொண்ட அஸ்வின், புகழ் ஆகியோர் பிரபலமடைந்தனர். இதனையடுத்து இருவரும் சினிமாவில் ஒன்றாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.
அஸ்வின் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘ என்ன சொல்ல போகிறாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதனை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தின் தெரிவித்துள்ளார். இப்படத்தை ஹரிஹரன் இயக்கவுள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைந்து படப்பிடிப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சென்னையைச் சுற்றிய இடங்களில் படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.