அசோக் செல்வனுக்குச் ஜோடியாகும் வாரிசு நடிகை

சினிமாவில் நடித்தவர்களின் வாரிசுகளும் சினிமாவில் அடியெடுத்து வைப்பது ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜீவிதா. இவரது கணவர் ராஜசேகர் என்பவரும் ஹீரோவாக வலம் வருகிறார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த இருவருமே தற்போது சினிமாவில் அறிமுகமாக இருக்கின்றனர்.
இவர்களின் ஒரு மகளான சிவானி ஏற்கனவே உதயநிதிக்குச் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்னொரு மகளான 19 வயதான சிவிதாவும் நாயகியாக அறிமுகமாக உள்ளார். அசோக்செல்வன் நடிக்கும் புதிய படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.