மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்பதால் ‘விக்ரம் 60’ என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா என பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…