ஓடிடியில் வருகிறார் ‘டாக்டர்’

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி முடித்துள்ள படம் ‘டாக்டர்’. இதில், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருப்பதால் வெளியிடப்படாமல் கிடப்பில் இருக்கிறது.
இந்நிலையில், படம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ளதால் தயாரிப்பாளருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகாச் சொல்லப்படுகிறது.
இதனால், படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டிஸ்டினி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.