பிரம்மாண்ட இயக்குநரின் இரு படத்தில் ஒரே நாயகி

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் சங்கர், இந்தியன் 2 படத்தை இயக்கிவந்தார். ஆனால், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படம் கிடப்பில் உள்ளது.
இதனையடுத்து, தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் சங்கர். இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்து, அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கயும் இந்தியில் ஷங்கர் தான் இயக்கவுள்ளார். இதில், ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்திலும் கியாரா தான் நாயகியாக நடிக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரின் பிறந்தநாளில் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.