இந்த முறையும் அஜித் ரசிகர்கள் ஏமாற்றப்படுவார்களா?

நடிகர் அஜித் தற்போது, போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
பொதுவாக, ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், வலிமை படத்தில் இந்தியாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டது.
ஒரே ஒரு சண்டைக்காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்க படக்குழு முடிவு செய்தது. ஆனால், கொரோனா பொது முடக்கத்தால் அதையும் இந்தியாவிலேயே படமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
படம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், படத்தைக் குறித்து ஒரு அப்டேடும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும், அரசியல் தலைவர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரிடமும் படத்தின் அப்டேட் கேட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதனால், மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால், கொரோனா உச்சத்தில் இருப்பதால் தற்போது அப்டேட் எதுவும் இல்லை கூறி விட்டனர். இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதனையடுத்து, தற்போது ஜூலை முதல் வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்கப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.