பாலிவுட் பாட்ஷாவுடன் கைகோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லி, ’ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் பெற்றார்.

அந்த படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதால், அறிமுக இயக்குனர்களில் கவனம் பெற்றார் அட்லி. அடுத்து, அவர் இயக்கிய தெறி, மெர்சல் , பிகில் என அனைத்து படங்களும் விமர்சனத்திற்கு ஆளானாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

இதனையடுத்து, தான் இயக்கும் 5 ஆவது படத்திற்கு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை நாயகனாக ஒப்பந்தம் அட்லி ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இப்போதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *