வலிமை அப்டேட் கொடுத்த யுவன்

நடிகர் அஜித் குமார் தற்போது  ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படம் ஆரம்பித்து ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில் படத்தைக் குறித்து ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் வேண்டும் பார்க்கும் அனைவரையும் கேட்கத் தொடங்கி விட்டனர்.

மே 1 ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காலம் என்பதால் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை என அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.  மாநாடு படத்தின் புரமோஷனுக்காக ட்வீட்டர் கிளப் அவுஸ் வந்த யுவன் ஷங்கர் ராஜாவிடம் வலிமை அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்டனர்.

இது குறித்து யுவன், “வலிமை” படத்தில் அம்மா பாசத்தை போற்றும் சென்டிமெண்ட் பாடல் ஒன்று உள்ளது. அப்பாடலை வித்தியாசமாக அமைத்துள்ளேன்” என்று வலிமை படத்தின் அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *