மீண்டும் தொடங்கும் விஜய் பட ஷூட்டிங்

மாஸ்டர் படத்தையடுத்து, நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் விஜய் 65 படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, ஜூன் 21 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக படத்தின் விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

விஜய் 65 படத்திற்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றுது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடைபட்டிருந்தது.

தற்போது, ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட உள்ளது. இதன்படி, ஜூலை 1 ஆம் தேதி முதல் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *