களை கட்டிய தளபதி பிறந்தநாள் கொண்டாட்டம்

இளைய தளபதி விஜய் இன்று தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தளபதி விஜய் தற்போது, நெல்சன் இயக்கத்தில் தனது 65 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று(21.6.2021) மாலை 6 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. கையில் துப்பாக்கியுடன் விஜய் இருப்பது போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.
இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
படத்தின் பர்ஸ்ட் லுக் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் மாலை வெளியான நிலையில், செக்கேண்ட் லுக் இரவு சரியாக 12 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.