ஆரம்பிக்கலாமா…இன்று வெளியாகும் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்

ரசிகர்களால் ’இளைய தளபதி’ என அழைக்கப்படும் விஜய், தனது 47 ஆவது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார்.

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  தனது 65 ஆவது படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் எனப் பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்நிலையில், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விஜய் 65 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *