ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி!

நடிகரும் பிரபல இயக்குநருமான ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்  பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 2 படத்தில் இடம்பெற்ற சில்லாட்ட பில்லாட்ட பாடலில் லாரன்ஸுடன் போட்டிப்போட்டுக்கொண்டு நடனம் ஆடி கவனம் ஈர்த்தார் எல்வின். சொந்தமாக நடனப் பயிற்சி பள்ளி  வைத்திருக்கும் எல்வின் சமீபத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார்.

அதன்படி, இன்று அவரது பிறந்தநாளையொட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஹீரோவாக எல்வினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரனும் நடிக்கிறார்கள். இயக்குநர், மற்ற நடிகர்கள் குறித்த தகவல் பின்பு வெளியாகும் என்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் டில்லி பாபு அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…