நாயகன் அவதாரம் எடுக்கும் லாரன்ஸ் தம்பி

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் எனப் பல முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். பேய் படம் என்றால் பயம் தான் என்பதை மாற்றி காமெடியான பேய் ட்ரெண்டை கொண்டுவந்தார் இவர் தான்.
காஞ்சனா -2 படத்தின் ஒரு பாடலின் மூலம் இவரது தம்பி எல்வின் அறிமுகமானார். இதனையடுத்து, அவரை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
ஆனால், கொரோனா பொது முடக்கம் காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. எல்வின் இன்று(21.6.2021) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனால், ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தனது, ட்விட்டர் பக்கத்தில், ”எல்வின் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், ராஜ் கிரணுடன் இன்னும் ஒரு மாஸ் ஹீரோவும் நடிக்க உள்ளார். மேலும், விவரங்கள் கூடிய சீக்கிரம் வெளியிடப்படும்” என பதிவிட்டுள்ளது.