செப்டம்பரில் வெளியாகும் கேஜிஎப் 2!

கொரோனா மூன்றாவது அலை வரவில்லை என்றால் கேஜிஎஃப் 2 செப்டம்பரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது கேஜிஎஃப் 2 இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேஜிஎஃப் 2 டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், வரும் ஜூலை 16 ஆம் தேதி கேஜிஎஃப் 2 உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது படக்குழு. அதன்படி, படம் வெளியாக இன்னும் 23 நாட்களே உள்ளன.

ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதிக கூட்டம் கூடும் இடம் என்பதால் தியேட்டர்கள் தாமதமாகத்தான் திறக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இதனால், கேஜிஎஃப் 2 வெளியீட்டுத் தேதியை படக்குழு தள்ளி வைத்திருப்பதாகவும், கொரோனா மூன்றாவது அலை வராவிட்டால் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…