உணவில் கரப்பான் பூச்சி… கடுப்பான பிரபல நடிகை!

ஸ்விக்கி மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
நடிகை நிவேதா பெத்துராஜ் கடுமையான பசியில் இருந்துள்ளார்.இதனால் அவர் ஸ்விக்கி ஆப் மூலம் சென்னை ஓஎம்ஆரில் உள்ள பிரபலமான மூன் லைட்உணவகத்தில் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.
டெலிவரி பாய் உணவை கொண்டுவந்து கொடுத்தவுடன் அதை பார்த்த நடிகை நிவேதா அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்கு காரணம் உணவில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளதே ஆகும்.
இவ்வாறு உணவில் கரப்பான் பூச்சி கிடப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஒரு முறை இதே போன்று அவரது உணவில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இது இரண்டாவது முறையாகும்.
இதனையடுத்து கோபம் அடைந்த நடிகை நிவேதா ஓஎம்ஆர் சாலையில் உள்ள அந்த மூன்லைட் உணவகத்தின் மீதும் ஸ்விக்கி மீதும் புகார் அளித்துள்ளார்.
மேலும், உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த ஹோட்டலின் மீது அனைவரையும் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.