புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதிதான். அவரைப் பார்க்கவேண்டும்’ என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை தனது ரசிகர் மன்றத்தின் மூலம் தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி அந்த சிறுவனை மேல் சென்று பார்த்துள்ளார். மேலும் அந்த சிறுவனை அவனது குடும்பத்தினரும் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.
புற்றுநோய் பாதித்த அந்த சிறுவன் விஜய் சேதுபதியை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.