தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல நடிகர்!

கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி செலுத்துவது என அனைவராலும் பார்க்கப்படுகிறது.
இதனால், அனைவரும் எந்தவித தயக்கமுமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதனையடுத்து, சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் பிரபல தமிழ் நடிகர் ஆர்யா தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர் பிரஷாந்த் நீல், விக்னேஷ் சிவன், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படம் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.