கொரோனா நிவாரண நிதி வழங்கிய பிரபல இயக்குனர்!

கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக வீசி வந்தபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த வேண்டுகோளை ஏற்று பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது இயக்குநர் சுசீந்திரன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் அவர் வழங்கினார்.
இயக்குநர் முருகதாஸ்,லிங்குசாமி, ஷங்கர், அஜித்,விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என பலர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.