திரையரங்குகளில் வெளியாகுமா ’பார்டர்’ ?

குற்றம் 23 படத்திற்குப் பின் அருண்விஜய் – அறிவழகன் கூட்டணியில் மீண்டும் தயாராகியுள்ள படம் பார்டர். இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின், கொரோனா முதல் அலையால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாகப் படப்பிடிப்பு பாதியில் நின்றது.

தற்போது, படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால், படத்தை வெளியிட படக்குழு முதலில் ஓடிடி தளத்தைத் தேர்வு செய்தது.

ஆனால், தற்போது தொற்று பரவல் குறைந்து ஜூலை இரண்டாம் வாரத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், படத்தை நேரடியாக திரையரங்களிலேயே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *