ஜகமே தந்திரம் வேற லெவல்…பாராட்டிய பிரபல நடிகர்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் உலகம் முழுக்க இன்று நெட்பிளிக்ஸ்ல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இலங்கைத் தமிழர்களை கேங்க்ஸ்டர்களாக காட்டியுள்ளார் என்ற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இந்த படத்தை பார்த்த பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜகமே தந்திரம் இப்போதுதான் பார்த்தேன். என்னுடைய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நல்ல கருத்துகளோடும் வேற லெவல் மேக்கிங்கோடும் படத்தை இயக்கி இருக்கிறார். அவருக்கு எப்போதுமே தமிழ் உணர்வு அதிகம் என்று பாராட்டியுள்ளார்.

சுருளி கதாபாத்திரத்திலேயே வாழ்ந்திருக்கிறார் தனுஷ். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் மற்ற படக்குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்றும் பாராட்டியிருக்கிறார்.

ஏற்கெனவே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *